வடிவமைப்பு, புதிய கண்டு பிடிப்பு, சிறந்த தரம் ஆகியனவற்றினால் உலக நாடுகளைக் கவர்ந்திழுத்து மாஸ் ஹோல்டிங்ஸ் தன்னை ஸ்திரமான ஒரு நிலைக்குத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இக்ககம்பனி 25 ஆண்டுகளுக்கு முன்னரே தூர நோக்குடனான சிந்தனையுடன் நிர்மாணிக்கப்பட்டது. மாஸ் முழு நிறைவான கலவையை உடைய துணிவு, ஆக்கத்திறன் மற்றும் உலகளாவியரீதியில் பாராட்டைப் பெற்றுக் கொண்டுள்ள கற்பனை ரீதியான சிந்தனை ஆகியனவற்றைக் கொண்டுள்ளது
Tமூன்று சகோதரர்களான மகேஷ், அஜய் மற்றும் சரத் அமலீன் ஆகிய மூவரும் வழக்கத்திற்கு மாறான தோ்வு ஒன்றை மேற்கொண்ட போது இக்கம்பனியானது சட்டரீதியாக 1986 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, தென்னாசியப் பிராந்தியத்தில் அந்தரங்க ஆடை உற்பத்திக் கலையில் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இன்று மாஸ் அந்தரங்கமான ஆடைகள், விளையாட்டு அங்கிகள், நிகழ்வு அங்கிகள், மற்றும் நீச்சல் உடைகள் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆசியாவின் பிரதான தயாரிப்பாளா்களுள் ஒருவராக ஐ.அ.டொ 1 பில்லியன் வருடாந்தத் திரும்பலுடன் செயற்பட்டு வருகின்றது. அவா்களது நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட 41 நிறுவனங்கள் 10 இற்கும் அதிகமான நாடுகளில் பரந்து காணப்படுவதோடு 60,000 இற்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளது.
மாஸ் நுகா்வோர் தொகுதியானது சர்வதேச நிறுவனங்களான விக்டோரியாஸ் சிக்ரட்(Victoria’s Secret) , நைக் (Nike) , மார்க் அன்ட் ஸ்பென்சர் (Marks and Spencer) ,டி.பி.எ (DBA),லுலுலெமன் (lululemon),சோமா (Soma),கொலம்பியா ஸ்போட்ஸ்வியர் (Columbia Sportswear),ரள்ப் லோரன் அன்ட் பனானா ரிபப்ளிக் (Ralph Lauren and Banana Republic) போன்ற உலகின் புகழ் பெற்ற இலச்சினைகளையும், உபாயரீதியான பங்கேற்புக்களையும் உள்ளடக்குகின்றது.
உலகம் பூராகவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உலகளாவிய வடிவமைப்பு ஒளிப்பட நிலையங்கள் மாஸ்’ இற்கான பிரதான பெறுமதிச் சேர்ப்பொன்றினை அபிவிருத்தி செய்துள்ளதோடு, மாஸ்’ செயற்பாட்டு முறைமைகளின் ஊடாக சார்பான தயாரிப்புக் கோட்பாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம் நுகர்வோருக்கு வேகத்தையும் சுறுசுறுப்பையூம் வழங்குவது தொடர்பான தொழில்முயற்சியொன்றாக அமைந்துள்ளது. மக்கள் மீதும் வளங்கள் மீதுமான முதலீடு பெறுமதிச் சங்கிலியின் ஊடாக நவீன கண்டுபிடிப்புக்களுக்கு வசதியளிக்கின்றது. இன்று மாஸ் வடிவமைப்பிலிருந்து விநியோகம் வரையிலான சேவைகளை வழங்கும் திறனுடன் ஒன்றிணைக்கப்பட்ட திறன்களைக் கொண்ட நிறுவனமாக விளங்குகின்றது
மேலும் மாஸ், உலகின் பிரதான சூழல் சார்ந்த தயாரிப்புப் பொறியொன்றை நிர்மாணிக்கும் நோக்குடன் துருளி (Thurulie)யுடன் இக்கைத்தொழிலில் ‘கிறீன் வேவ்’ (‘green wave’) ஒன்றினை ஆரம்பித்தது. இம்முயற்சியானது ஜ.அ கிரீன் பில்டிங் கவுன்சில் (US Green Building Council) இனால் லீட் பிலாட்டினம் (LEED Platinum )ஆகத் தரப்படுத்தப்பட்டதோடு, நிலைபேறான உலகளாவிய சிறந்த நடைமுறையொன்றாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
உலகளாவிய ஆடை மற்றும் நெசவுத் தயாரிப்பாளர் ஒருவராக நிகரற்ற தனிச் சிறப்பு வாய்ந்த விசேட திறமையினை அடைந்த பின்னர், தனது கவனத்தினை விரிவுபடுத்தியுள்ளதோடு, வடிவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைமைகளுடன் தொடா்புடைய துறைகளுக்கும் திருப்பியுள்ளது. அவா்களது முயற்சிகள் வட அமொரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் முன்னிலையிலான செயற்பாட்டுடன் தகவல் தொழில்நுட்பம், இலச்சினைகள் மற்றும் கைத்தொழில் பங்காளர்களுக்கான தனது வர்த்தகத் தொகுதியொன்றைக் கையாள்வதில் கவனஞ் செலுத்தியுள்ளது. இலச்சினைகளின் தனிப்பட்ட விற்பனைப் புள்ளிகள் அவா்களது நுகா்வோர்களின் மையப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பாகவும் மற்றும் பெறுமதி மதிப்பிற்கான பொருந்துகையாகவும் உள்ளது.
தமது பேரார்வத்தின் காரணமாகவும் சிறந்த ஊக்கத்தின் காரணமாகவும் புகழ்பெற்ற உலகளாவிய குழுவொன்றுடன், மாஸ் மக்களை உலக தரத்திலான முதன்மை வாய்ந்த உற்பத்திப் பொருட்களை வழங்குவதன் மூலமும், தமது பணியாளா்களை அவா்களது தொழில்களை வழக்கத்திற்கு மாறாக மாத்திரமன்றி சமூகத்தில் அவா்களது எதிர்பார்க்கப்பட்ட பங்கினையும் செயற்பாட்டு ரீதியாகவும், நிலைபேறான முறையில் வலுப்படுத்துவதன் மூலமும் மக்களின் தேவைகளை அன்புடன் நிறைவேற்றுகின்றது. அவா்களது சமூகத்தின் நலன் மீதும் எதிர்கால சந்ததியினா்மீதும் முதலிடுவதன் மூலம் கடப்பாடுடைய ஒரு கூட்டமைப்பாக அவா்களது சமூகங்களிலிருந்தான பலத்தினையும் ஆதரவினையும் சமநிலைப்படுத்துகின்றது.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Quisque cursus elementum pellentesque. Phasellus scelerisque facilisis sollicitudin. Maecenas tincidunt cursus malesuada. Cras rhoncus, dui at semper accumsan, massa erat finibus odio, ac auctor mi massa non risus. Fusce pharetra congue augue at dapibus. Vestibulum finibus quam eget erat volutpat mattis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.