• Alt

    Sri Lanka's Apex Organisation for Export Promotion

    Explore

  • DSI

    DSI

    கடந்த 02 ஆண்டு காலப்பிரிவில் தென் ஆபிரிக்காவில் எமது தூதுவர் குழுவை முதலாவதாகவும், முதன்மையானதாகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும், தென் ஆபிரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

    எமது கம்பனி டி.எஸ்.ஜ (DSI Tyres), டி.எஸ்.ஜ சம்சன் குரூப் (DSI Samson Group) இன் அங்கத்தவராக 1983 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. நாம் பாரிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக விளங்குவதோடு, இலங்கையிலிருந்து காற்றடைத்த டயா்களினதும், குழாய்களினதும் ஏற்றுமதியாளராகவும் விளங்குகின்றோம். தற்போது 6 கண்டங்களிலுமுள்ள 70 இற்கும் அதிகமான நாடுகளுக்கு நாம் எமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கின்றோம். தன்சானியா போன்ற நாடுகளில் நாம் பிரதான சந்தையாக விளங்குவதோடு, ஐக்கிய இராச்சியம், பிறேசில், மெக்சிக்கோ, இத்தாலி, ஜேர்மனி, போலந்து, அவூஸ்திரேலியா, எகிப்து, கென்யா, சம்பியா, கென்யா, உகண்டா, டுபாய், சிரியா மற்றும் பாகிஸ்தான் போன்ற அநேகமான நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவிலான சந்தைப் பங்கினைக் கொண்டுள்ளன

    ஆபிரிக்காவைச் சுற்றியுள்ள நாடுகளில் நாம் எமது நிறுவனத்தினைச் சிறந்த முறையில் ஸ்தாபித்திருந்தாலும் கூட, தென் ஆபிரிக்காவில் உறுதியான ஒரு வர்த்தகத்தினை மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ளது. இதற்காக நாம் தொடர்ந்து எமது முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். அதன் காரணமாக 2012 ஆம் ஆண்டில் நாம் சய்டெக்ஸ் (SAITEX) வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்குத் தீர்மானித்தோம். அவ்விஜயத்தின் பின்னர் வர்த்தகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவை எமக்கு இருந்திருந்தாலும் கூட, துரதிஷ்டவசமாக அதனை மேற்கொள்ள முடியாது போனது.

    ஆனால் நாம் அந்த முயற்சியினையும் கைவிடவில்லை. மேலே குறிப்பிட்ட விஜயத்தின் போது அங்கு ஒரு சில பிரிவினரைச் சந்திக்க நேர்ந்ததோடு, அவா்களின் ஊடாக சந்தை எதிர்பார்ப்புக்கள் மற்றும் போட்டியாளர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பாகவும் சிறந்த ஒரு அறிவினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அது மாத்திரமல்லாமல், பிரிடோரியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆதரவுடன் எமது உற்பத்திப் பொருட்களுடன் தொடா்புடைய இன்னும் பல சந்தைகளுக்கும் விஜயம் செய்தோம். அவ்விஜயத்தின் பின்னா் நாம் அங்கு சந்தித்த வாடிக்கையாளர்களுடன் தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மாதிரிகளையும், விலை மாற்றங்களையும் அனுப்பி வைப்பதன் மூலம் இறுக்கப் பிடித்துக் கொண்டோம்.

    2012 ஆம் ஆண்டு காலப்பிரிவில் எம்மால் எதனையும் அபிவிருத்தி செய்ய முடியாது போனதனால், நாம் மீண்டும் 2013 ஆம் ஆண்டிலும் 2013 சய்டெக்ஸ் (SAITEX ) பங்கேற்பதற்குத் தீர்மானித்தோம். 2012 ஆண்டில் அதே கண்காட்சியில் சந்தித்த பிரிவினரின் தொடர்ச்சியான ஆதரவின் காரணமாக சந்தை நிபந்தனைகள் மற்றும் எமது உற்பத்திப் பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள் போன்றவை தொடர்பாக மிகவும் வலுப்பெற்றது .

    முழு நிறைவாக 2013 சய்டெக்ஸ் (SAITEX) கண்காட்சியில் வர்த்தகத்தில் புதிய ஒரு பக்கத்தினை திறக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது

    தற்போது எம்மால் அவா்களுடன் இறுதி வரைக்கும் ஒரு சிறந்த உறவைப் பேணக் கூடியதாக உள்ளதோடு, இவ்விஜயத்தின் நோக்கமானது அவா்களுடனான உறவினை மேலும் பலப்படுத்துவதும் சந்தைக்கு விஜயம் செய்தலுமாகும்.

    அதற்கு அப்பால் குறிப்பிட்ட பிரிவுகளிலும் புதிய வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம்

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Quisque cursus elementum pellentesque. Phasellus scelerisque facilisis sollicitudin. Maecenas tincidunt cursus malesuada. Cras rhoncus, dui at semper accumsan, massa erat finibus odio, ac auctor mi massa non risus. Fusce pharetra congue augue at dapibus. Vestibulum finibus quam eget erat volutpat mattis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.